மேலும் செய்திகள்
துாய்மை பணியில் எம்.பி.,
02-Nov-2024
திருப்பூர் ; 'நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், நல்லாற்றை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும்; தேங்கியுள்ள குப்பையை அகற்ற வேண்டும்' என, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.ஏ.வி.பி., பள்ளி முதல் அனுப்பர்பாளையம் வரையிலான, ஆத்துப்பாளையம் ரோடு, மாநகராட்சி குடிநீர் திட்ட பணிகளுக்கான தோண்டப்பட்டது. குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், தினமும் விபத்து நடக்கிறது; இந்த ரோட்டை முழுமையான தார்ரோடாக மாற்ற வேண்டும்.சீமை கருவேல மரம், குப்பை புதைந்து, சமூக விரோதிகளுக்கு கூடாரமாக மாறியுள்ளன. சுகாதாரமில்லாமல், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், நல்லாற்றை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும்.ஜெய்நகர் செல்லும் ரோட்டில் நோய் தொற்று ஏற்படும் வகையில் கன்டெய்னர் வைத்தும், எவ்வித பாராமரிப்பும் செய்யாமல் குப்பை கொட்டி வைக்கின்றனர். அதிக மக்கள் சென்று வரும் ரோட்டை, குப்பை மேடாக மாற்றக்கூடாது.பாரதி நகரில் தற்போது அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாய், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில், குறுகிய சந்து பகுதியில் உள்ளது. குழாயை, விநாயகர் கோவில் அருகே மாற்றி கொடுக்க வேண்டும். குப்பையை அகற்ற வந்த பொக்லைன் வாகனம் பஞ்சராகி ஒரு வாரமாக அதேயிடத்தில் நிற்கிறது.எனவே, முதலில், வாகனத்தை சீரமைத்து குப்பையை உடனே அள்ள வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், ஆத்துப்பாளையம் கிளை தலைவர் பாலாஜி, செயலாளர் யோகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
02-Nov-2024