உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறிவியல் பூங்கா அமைக்க வேண்டும்

அறிவியல் பூங்கா அமைக்க வேண்டும்

திருப்பூர்; அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின், திருப்பூர் மாநகர் மாவட்ட முதல் மாநாடு, ஊத்துக்குளி ரோடு, இந்திய கம்யூ., கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.இளைஞர் அரங்க பொறுப்பாளர் செந்தில்குமார், மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சங்கீதா வரவேற்றார். இந்திய கம்யூ., மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநாட்டை துவக்கி வைத்தார். எம்.பி., சுப்பராயன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மாநில இளம் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி மாநாட்டை நிறைவு செய்தார். மாநகர் மாவட்ட தலைவராக விஜய், செயலாளராக அரவிந்த்குமார், பொருளாளராக சதீஷ்குமார் தேர்வாகினர். நகரம் மற்றும் கிராமப்புறங்களில், அதிக அளவு விளையாட்டு மைதானத்தை உருவாக்கி, தேவையான உபகரணங்களை அரசு வழங்க வேண்டும். போதை பொருள் புழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.திருப்பூர் வடக்கு பகுதியில், 500 படுக்கை வசதியுடன் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில், அதிநவீன அறிவியல் பூங்கா அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை