பல்லாங்குழிகள் அதிகம் விபத்துகள் தொடர்கதை
அருள்புரம்- - கணபதிபாளையம் செல்லும் ரோடு, பாச்சான்காட்டுபாளையம், கணபதிபாளையம் வழியாக அல்லாளபுரம் மற்றும் பொங்கலுாரை இணைக்கிறது. இந்த ரோட்டில், தினமும், பள்ளி கல்லூரி வாகனங்கள், பனியன் கம்பெனி வேன்கள், இருசக்கர வாகனங்கள் என, ஏராளமான வாகனங்கள் இவ்வழியாக வந்து செல்கின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த, இந்த ரோட்டின் பல இடங்களில், பல்லாங்குழிகள் உருவாகியுள்ளன. மழை பெய்து வரும் நிலையில், குழிகளில் மழைநீர் தேங்கிநிற்கின்றன. குழிகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மூன்று கி.மீ., துாரம் வரை இந்த ரோட்டின் பல இடங்களிலும் இதே நிலைதான் உள்ளது. ரோட்டை சீரமைக்க வேண்டும்.