உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அடுத்தடுத்து திருட்டு: காங்கயத்தில் துணிகரம்

அடுத்தடுத்து திருட்டு: காங்கயத்தில் துணிகரம்

திருப்பூர்: காங்கயம் பஸ் ஸ்டாண்டிற்குள் நகராட்சி வணிக வரி கடைகளில், 12வது எண்ணுள்ள கடையை காஜா மைதீன், 38 என்பவர் ஏலத்தில் எடுத்து, கடந்த சில ஆண்டுகளாக மொபைல் போன் பழுது நீக்குதல், வாட்ச் விற்பனை மற்றும் பழுது நீக்கும் பணியை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, அருகே இரும்பு ராடும் கிடந்தது. பக்கத்து கடைக்காரர்கள், காஜாமைதீனுக்கு தகவல் கொடுத்தனர். கடைக்குள் இருந்த, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர். 24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பஸ் ஸ்டாண்டில் நடந்த திருட்டு, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கயம், அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 50; மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது, கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, டிராவில் இருந்த, 5 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. இதேபோல் காங்கயம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வேன் ஸ்டாண்ட் பகுதியில் கண்ணன், 45 என்பவர் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் பூட்டை உடைத்து, இரண்டு மொபைல் போன்கள் திருடு போனது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி