உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோடு சந்திப்பில் வேகத்தடை தேவை

ரோடு சந்திப்பில் வேகத்தடை தேவை

உடுமலை;உடுமலை அருகே ஏரிப்பாளையத்தில், பல்லடம் மாநில நெடுஞ்சாலை மற்றும் செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் விபத்துகளை தவிர்க்க முன்பு, வேகத்தடை மற்றும் தானியங்கி பிளிக்கிரிங் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது.பராமரிப்பு இல்லாததால், சிக்னல் செயல்படாமல் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டது; வேகத்தடையும் தற்போது இல்லை. இதனால், காலை, மாலை நேரங்களில், அப்பகுதியில் நெரிசல் அதிகரித்துள்ளது.மாநில நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக வரும் நிலையில், செஞ்சேரிமலை ரோட்டில் இருந்து வரும் வாகன ஓட்டுநர்கள், சந்திப்பு பகுதியை கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.விபத்து ஏற்படும் முன் மீண்டும் வேகத்தடை மற்றும் சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ