உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆபரேஷன் செய்து கொண்ட இளம்  பெண் பரிதாப பலி-

ஆபரேஷன் செய்து கொண்ட இளம்  பெண் பரிதாப பலி-

-திருப்பூர்; தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள பரஞ்சேர்வழி, மாரணம்பாளையத்தை சேர்ந்தவர் கயிலைநாதன். அவரது மனைவி கவுரி மனோகரி, 26. தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த கவுரி மனோகரி, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம், 16ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சையில், பெண் குழந்தை பிறந்தது.அதன்பின் அவர், ஊதியூர், குள்ளக்காளிபாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த, 29ம் தேதி கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியகவுரி மனோகரிக்கு நேற்று முன்தினம் காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.அவரை குடும்பத்தினர் ஆம்புலன்ஸில் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !