உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் கோலாகலம் 

அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் கோலாகலம் 

திருப்பூர்; ஆடிப்பூரத்தை ஒட்டி, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், வளையல் அலங்கார பூஜை நடந்தது. ஆண்டாள் அவதரித்த நாளான ஆடிப்பூரம் அம்மன் கோவில்களிலும், சிறப்பு அபிேஷகம் மற்றும் வளையல் அலங்காரத்துடன் கொண்டாடப்பட்டது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், விசாலாட்சியம்மனுக்கு மகா அபிேஷகம் மற்றும் சவுரிமுடி அலங்கார பூஜைகள் நடந்தது. விசாலாட்சியம்மன் உற்சவருக்கு அபிேஷகமும், பொன்னுாஞ்சல் உற்சவமும் நடந்தது. ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆடிப்பூரம் விழாவையொட்டி, பூமிதேவி தாயாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. கோவிலில், 15 ம் ஆண்டு ஆடிப்பூர விழாவையொட்டி, ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், நேற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. ஸ்ரீசாய்கிருஷ்ணா குழுவினர் சார்பில், 'சம்பூர்ண சுகந்தமான சுரபி' என்ற தலைப்பில், நடனம் மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு அபிேஷகம் மற்றும் அம்மனுக்கு வளையல் அலங்காரபூஜை நடந்தது. பெருமாள் கோவில்களில் உள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு, கண்ணாடி வளையல், மஞ்சள் சரடு, பூ, மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை