உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பரிதாப நிலையில் நெடுஞ்சாலை; அதிகரித்து வரும் விபத்துகள்

பரிதாப நிலையில் நெடுஞ்சாலை; அதிகரித்து வரும் விபத்துகள்

உடுமலை; உடுமலை பெரியகோட்டை பிரிவு முதல் ராஜவாய்க்கால் பள்ளம் வரை, நகரப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.நெடுஞ்சாலை போக்குவரத்துடன், நகர வாகன போக்குவரத்தும் இணைவதால், இந்த ரோட்டில் நெரிசல் அதிகம் காணப்படும்.ஆனால், நகரப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பில், அலட்சியம் காட்டப்படுகிறது. இதனால், பல இடங்கள் பள்ளமாக மாறி, வாகன ஓட்டுநர்களை விபத்துக்குள்ளாக்குகிறது.அண்ணா குடியிருப்பு பகுதியில் இருந்து கொழுமம் ரோடு சந்திப்பு வரை, ஆங்காங்கே குழி, தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் சிக்னல் முதல் கொல்லம்பட்டரை வரை, 'மெகா' குழிகள் இருப்பதால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.நெரிசலான நேரங்களில், கனரக வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், அங்குள்ள குழிகளால் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். இது குறித்து புகார் தெரிவித்தாலும், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை.இதே போல், ரோட்டின் மத்தியில் வெள்ளைக்கோடு மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதற்கான எச்சரிக்கை பலகைகளும் தேசிய நெடுஞ்சாலையில் மாயமாகியுள்ளது வாகன ஓட்டுநர்களை வேதனையடைய செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !