உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கணக்கு 0 ; வெளியேற்றம் 100 !: அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு சட்டவிரோதம் என விவசாயிகள் ஆவேசம்

கணக்கு 0 ; வெளியேற்றம் 100 !: அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு சட்டவிரோதம் என விவசாயிகள் ஆவேசம்

உடுமலை: அமராவதி அணையிலிருந்து நீர் வெளியேற்றவில்லை என கணக்கு காண்பிக்கும் அதிகாரிகள், வினாடிக்கு, 100 கன அடி வரை, தண்ணீர் திருடுபவர்களுக்கு சாதகமாக தண்ணீர் திறக்கின்றனர்,' என விவசாயிகள், ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்தில், 54,637 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.அணையிலிருந்து, ஜூன் மாதம் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும்; நடப்பாண்டு பருவ மழை ஏமாற்றியதால், அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.இதனால், பாசனத்திற்கு நீர் திறக்காமல், தாராபுரம், கரூர் பகுதி குடிநீருக்கு மட்டும் நீர் ஆற்றில் திறக்கப்படுகிறது.இந்நிலையில், புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கரில், நிலைப்பயிரான கரும்பு, தென்னை தண்ணீரின்றி காய்கிறது; குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதால், 15 நாட்களாவது, பிரதான கால்வாயில் உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.பல போராட்டங்கள் நடத்தியும், புதிய ஆயக்கட்டு விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வில்லை.அணையில் இருந்து எப்பகுதிக்கும் தண்ணீர் திறக்கவில்லை என நீர்வளத்துறையினர் கணக்கு காண்பித்து வருகின்றனர்; ஆனால், ஆற்றில் குறிப்பிட்ட அளவு நீரோட்டம் உள்ளது. சந்தேகமடைந்த விவசாயிகள் அணைக்கு சென்று நேரடியாக பார்வையிட்டனர். அப்போது அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறியதாவது :அமராவதி புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், பயிர்கள் காய்ந்து வருகின்றன; மழை இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது.நிலைப்பயிர்களை காப்பாற்ற, ஒரு டிராக்டர் தண்ணீரை ரூ. 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குகிறோம். உயிர்த்தண்ணீருக்காக போராடியும் பலனில்லை.ஆனால், சட்ட விரோதமாக ஆற்று நீரை திருடுபவர்களுக்காக, அணை மதகு வழியாக, வினாடிக்கு, 100 கன அடி வரை நீர் வெளியேற்றுகின்றனர். அணைக்கு நீர் வரத்தை குறைத்து, முறைகேடாக வெளியேற்றுவதை நேரடியாக பதிவு செய்துள்ளோம்.கணக்கில் வராமல் வெளியேற்றும் நீரை, எங்களுக்கு வழங்கினால், பயிர்களையும், கால்நடைகளையும் காப்பாற்ற முடியும். பிரதான கால்வாயில் உயிர்த்தண்ணீர் திறக்காவிட்டால், கால்நடைகளுடன் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு, தெரிவித்தனர்.அமராவதி அணை உதவி செயற்பொறியாளர் ஆதிசிவனிடம் கேட்ட போது, '' அணை மதகுகள், 60 ஆண்டு பழமையானதால், பழுது ஏற்பட்டு, நீர்க்கசிந்து ஆற்றில் செல்கிறது. புதுப்பிக்க திட்ட மதிப்பீடு அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம். விரைவில் சரி செய்யப்படும்,'' என்றார். Gallery


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி