தேங்கிய குப்பைகள்... நீங்குமா சுகாதாரச் சீர்கேடு?
தண்ணீர் வீண்திருப்பூர், 21வது வார்டு, எல்.ஜி., மைதானம் பகுதியில், குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- கவுதம், எல்.ஜி., மைதானம். (படம் உண்டு)குமரானந்தபுரம் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- ஜான்பால், குமரானந்தபுரம். (படம் உண்டு)கழிவுநீரால் அவதிபெருமாநல்லுார், போலீஸ் ஸ்டேஷன் - ஈஸ்வரன் கோவில் வீதியில் சாக்கடை கால்வாய் வசதியில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால், பாதசாரிகள் நடந்து செல்ல வழியில்லை.- குட்டி குமார், பெருமாநல்லுார். (படம் உண்டு)பி.என்., ரோடு, சாய் மெட்ரிக் ஸ்கூல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கியுள்ளது.- சம்பத், பி.என்., ரோடு. (படம் உண்டு)சுகாதாரக்கேடுகுப்பாண்டம்பாளையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அருகே, கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- சரவணன், குப்பாண்டம்பாளையம். (படம் உண்டு)வீரபாண்டி - மீனாம்பாறை சாலையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.- செல்வராஜ், வீரபாண்டி. (படம் உண்டு)மங்கலம் - வஞ்சிபாளையம் சாலையோரம் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.- சர்தார் பாட்ஷா, வஞ்சிபாளையம். (படம் உண்டு)மின்கம்பம் சேதம்காலேஜ் ரோடு, அமர்ஜோதி சாமுண்டி நகரில் மின்கம்பம் அடிப்பாகம் சேதமாகி ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.- கார்த்திகேயன், அமர்ஜோதி சாமுண்டி நகர். (படம் உண்டு)ரியாக் ஷன்குப்பை அகற்றம்பூலுவபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி அருகே, குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டன.- சதாசிவம், பூலுவபட்டி. (படம் உண்டு)ஒளிரும் விளக்குபெரியாண்டிபாளையம், தனவர்ஷினி அவென்யூ, சித்தி விநாயகர் கோவில் வீதியில், தெருவிளக்கு எரிவதில்லை என்று வெளியான 'தினமலர்' செய்தியால், தெருவிளக்கு மாற்றப்பட்டு ஒளிர்கிறது.- ரமேஷ்கண்ணன், தனவர்ஷினி அவென்யூ. (படம் உண்டு)