மேலும் செய்திகள்
தாலுகா அலுவலக வளாகம் தெரு நாய்கள் அதிகரிப்பு
09-Oct-2024
திருப்பூர் : மாநில பொது செயலாளர் முருகானந்தம் தலைமையில், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொதுசெயலாளர் சீனிவாசன், மண்டல் தலைவர்கள் சுரேஷ், ராம்குமார், வேலுசாமி உள்ளிட்ட பா.ஜ., வினர், திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:திருப்பூர் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரம்; உலக அரங்கில், ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றி வருகிறது. திருப்பூரில் நாடு முழுக்க வசிப்போருக்கு பெரிய வேலைவாய்ப்பு வழங்கி பல்வேறு தரப்பட்ட மக்களும் தொழில்கள் செய்து வசித்து வருகின்றனர்.பாண்டியன் நகரில் நடந்த வெடிவிபத்தில், நான்கு பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். வீடுகள் சேதமடைந்தன. எதிர்பாராத மற்றும் விரும்ப தகாத நிகழ்வாகும். மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பண்டிகைக்காலம் நெருங்கி வரும் நிலையில், மக்கள் ஒரு அச்ச உணர்வை எதிர்கொள்ளும் சூழல் உள்ளது. விபத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க உறுதியான கடும் நடவடிக்கை வேண்டும்.சம்பவத்தை சிலர் அரசியல் ஆக்கவும், சிலர் மக்களிடையே வேற்றுமையும், வெறுப்புணர்வையும் துாண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.வெடி விபத்துக்கு சம்பந்தமில்லாத நபர்களையும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சம்பந்தப்படுத்தி பதிவிட்டு வெறுப்புணர்வை துாண்டி வருகின்றனர். வதந்தியை பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
09-Oct-2024