அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம்
திருப்பூர்; காங்கயம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, 58 படுக்கை வசதிகளுடன் கூடுதல் கட்டடம், மூன்று தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. வரவேற்பறை, கண் சிகிச்சை, எலும்பு சிகிச்சை, காது, மூக்கு தொண்டை, வெளிப்புற நோயாளிகள் பிரிவு, மருந்தக அறை, 'அல்ட்ரா ஸ்கேன்' எக்ஸ்ரே, சி.டி., ஸ்கேன் அறை, ரத்த வங்கி, தலைமை மருத்துவ அலுவலர் அறை, கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. முதல் தளத்தில், பெண்களுக்கான அறுவை சிகிச்சை பிரிவும், செவிலியர் அறை, மகப்பேறு அறுவை சிகிச்சை அறை உள்ளிட்டவை கட்டப்படுகின்றன. இரண்டாவது தளத்தில், கண் அறுவை சிகிச்சை அறை, செவிலியர் அறை ஆகியன அமைகின்றன. சாய்தளம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், செவிலியர் அறை, கழிப்பறை வசதி, 'லிப்ட்' வசதியுடன், கட்டடம் கட்டி முடிக்கப்பட உள்ளது. இதனை, அமைச்சர் சாமிநாதன் நேற்று, மருத்துவமனை கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். அலுவலர் ஆய்வு திருப்பூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்து வருகிறது. முகாம் நடவடிக்கை குறித்து கலெக்டர் மனிஷ் நாரணவரே முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை வழங்கினார்.