உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூடுதல் வகுப்பறை; பெற்றோர் யோசனை

கூடுதல் வகுப்பறை; பெற்றோர் யோசனை

அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட உள்ள கூடுதல் வகுப்பறையை தற்போது திட்டமிட்டுள்ள இடத்துக்கு பதிலாக வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்று பெற்றோர் யோசனை தெரிவித்துள்ளனர்.பெருமாநல்லுாரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. ஆயிரத்து 300 மாணவிகள் படித்து வருகின்றனர்.பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்ட 'நபார்டு' திட்டத்தின் கீழ் 2.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளியில் மாணவிகள் விளையாட முன்புறம் மற்றும் பின்புறம் சிறிய அளவிலான இடமே உள்ளது.கூடுதல் வகுப்பறை பின் புறம் உள்ள சிறு மைதானத்தில் கட்டப்பட உள்ளது. இதனால் மாணவிகள் விளையாட இடமின்றி பாதிக்கப்படுவர்.பள்ளி முன்பகுதியில் உள்ள ஓட்டு கட்டடத்தையும், அதன் பின்புறமுள்ள உபயோகத்தில் இல்லாத பழைய சிமென்ட் சீட் கட்டத்தையும் அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டினால் மாணவிகளுக்கு கூடுதல் வகுப்பறை கிடைப்பதுடன், விளையாட்டு மைதானமும் இருக்கும் என்று பெற்றோர்கள் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ