உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுகாதார நிலையத்தில் கூடுதல் வசதி தேவை

சுகாதார நிலையத்தில் கூடுதல் வசதி தேவை

உடுமலை ; பெதப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், படுக்கை வசதிகளை அதிகரித்து, கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு நிலவுகிறது.குடிமங்கலம் ஒன்றியம், பெதப்பம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த, 1962ல் கட்டடம் மற்றும் இடம் தானமாக வழங்கப்பட்டு, இச்சுகாதார நிலையம் துவக்கப்பட்டது.நுாற்பாலைகள், காற்றாலைகள், பின்னலாடை நிறுவனங்கள் என தொழிற்சாலைகள் இப்பகுதியில் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, வரும் உள் மற்றும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.ஆனால், படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படவில்லை. தற்போது, 6 படுக்கை வசதி மற்றும் அதற்கேற்ப டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில், அவசர சிகிச்சைக்கு டாக்டர் இருப்பதில்லை. இதனால், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் விபத்து மற்றும் இதர அவசர மருத்துவ சிகிச்சைக்காக, அப்பகுதி மக்கள் உடுமலைக்கு செல்ல வேண்டியுள்ளது.பெதப்பம்பட்டி பகுதியில் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூடுதல் படுக்கை வசதி மற்றும் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ