உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அ.தி.மு.க., வக்கீல்கள் முறையீடு

அ.தி.மு.க., வக்கீல்கள் முறையீடு

திருப்பூர் : அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாக அ.தி.மு.க., வக்கீல் அணியினர் புகார் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., வக்கீல் அணி தலைவர் வெள்ளியங்கிரி மற்றும் நிர்வாகிகள் திருப்பூர் கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் நேற்று அளித்த மனு:திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், திருப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த ஒருவருடன் பண வரவு செலவு வைத்திருந்தார். இந்நிலையில் பணத்தை மோசடி செய்யும் விதமாக, குணசேகரனிடம் பணியாற்றிய இருவர், நிதி நிறுவனம் நடத்தி வந்தவருடன் இணைந்து சில முறைகேடுகளை செய்தனர். விசாரித்த போது இது தெரிய வந்தது.நிதிநிறுவனம் நடத்திவந்தவருடன் அவருடன் வரவு செலவு வைத்திருந்த ஒருவருக்கு பிரச்னையும், மோதலும் ஏற்பட்டது.இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாத குணசேகரன் மீதும் புகார் அளித்துள்ளார்.கட்சிக்கும், நிர்வாகிக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த புகார் உள்ளது. இதன் மீது விசாரித்தும், கந்து வட்டி தொழில் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை