உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த அ.தி.மு.க., திட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த அ.தி.மு.க., திட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுகாதார பணிகளை மும்முரப்படுத்தவும் வேண்டும், என அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனரிடம் அளித்த மனு விவரம்:திருப்பூர் பகுதியில் மின் கட்டண உயர்வு, பல்வேறு வரியினங்கள் உயர்வு போன்ற காரணங்களால் தொழில்கள் மிகவும் நலிவடைந்துள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கியுள்ளன. திருப்பூரை நம்பி வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்வா தாரம் தேடி வருகின்றனர்.இந்நிலையில், பிற மாநகராட்சிகளுடன் ஒப்பிட்டு திருப்பூர் மாநகராட்சி சொத்து வரியை உயர்த்தியுள்ளது. சொத்து வரி உயர்வு குறித்து அ.தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்தும், நிர்வாகத்துக்கு கடிதம் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.சொத்து வரி, கட்டட அப்ரூவல் கட்டணம், பாதாள சாக்கடை டிபாசிட், குடிநீர் கட்டணம் என உயர்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் திரும்ப பெற வேண்டும்.இது குறித்து சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும். துாய்மைப் பணியில், கடும் மந்த நிலை உள்ளது. ஒப்பந்த நிறுவனம் குறைந்த ஆட்களை கொண்டு பணி செய்வதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.மேற்பார்வையாளர்கள் தேவையான அளவு இல்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், உண்ணாவிரதம் உட்பட பல போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி