உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சூப்பர் பாஸ்பேட் - காம்ப்ளக்ஸ் உரங்கள் பயன்படுத்த அட்வைஸ்

சூப்பர் பாஸ்பேட் - காம்ப்ளக்ஸ் உரங்கள் பயன்படுத்த அட்வைஸ்

திருப்பூர்:டி.ஏ.பி.,க்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு, 390.26 ஏக்கர் பரப்பளவில் சோளம், 632.32 ஏக்கர் பயிறு வகைகள், 8,257.21 ஏக்கர் எண்ணெய் வித்துக்கள், ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 321 ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறை சார்பில், பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்புவைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்திலுள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உரம் விற்பனை நிலையங்களில், 2,780 டன் யூரியா, 891 டன் டி.ஏ.பி., - 849 டன், பொட்டாஷ் - 5,677 டன் காம்ப்ளக்ஸ், 657 டன் சூப்பர் பாஸ்பேட் இருப்பு உள்ளது.தென்னைக்கு, நீரில் கரையும் வெள்ளை பொட்டாஷ் உரம் இருப்புவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் டி.ஏ.பி., விலை அதிகரித்துள்ளது. எனவே விவசாயிகள், டி.ஏ.பி.,க்கு மாற்றாக, கூடுதல் சத்துக்களை உள்ளடக்கிய, சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டும். சூப்பர் பாஸ்பேட் உரத்தை எண்ணெய் வித்து பயிர்களில் பயன்படுத்தும்போது, மகசூல் அதிகரிக்கிறது. டி.ஏ.பி., (50 கிலோ) - 1,350 ரூபாய், சூப்பர்பாஸ்பேட் - 610, அமோனியம் பாஸ்பேட் - 1,220 ரூபாயாக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை