வாசகர்கள் கருத்துகள் ( 1 )
People from Chennai say there was good rains today evening
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று துவங்குகிறது. வரும், 28ம் தேதி வரை, 25 நாட்களுக்கு இனி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப். மாதமே வெயில் சுட்டெரித்து, சில நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹிட் தாண்டி வெப்பம் பதிவான நிலையில், அக்னி நட்சத்திரம் துவக்கத்தால் மேலும் வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.அக்னி நட்சத்திர வெயில் முடியும் வரை அதிகளவில் தண்ணீர் அருந்துவதுடன், உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில், இயற்கையான பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறை அதிகாரிகள் அறிவுரைகளை வழங்குகின்றனர்.அவர்கள் கூறியதாவது:மனித உடலின் சராசரி வெப்ப நிலை, 98.4 டிகிரி பாரன்ஹீட். புறச் சூழலில் உள்ள வெப்பநிலை அதைத்தாண்டி அதிகரிக்கும் போது அந்த வெப்பம் உடலில் கடத்தப்படுகிறது. உச்ச வெப்பநிலை தருணத்தில் உடலானது தன்னைத் தானே குளிர்விக்க பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்ளும். ஒரு கட்டத்துக்கு மேல் அது பலனளிக்காத நிலையில் மயக்கம், உணர்விழப்பு வெப்பவாதம் ஆகியவை ஏற்படும்.நேரடியாக வெயிலில் செல்லா விட்டாலும் சூரிய வெப்பம் வேறு சில வகைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வெப்பம் நிறைந்த அறை, வெயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் கார் போன்ற காற்றோட்டம் இல்லாத இடங்களுக்குள் செல்லும் போது அதில் நிரம்பியிருக்கும் சூடான காற்று நமக்குள் ஊடுருவி வெப்பநிலையை அதிகரிக்கும்.நாக்கு வறண்டு போதால், தசைப்பிடிப்பு, சிறுநீர் அடர் மஞ்சளாக செல்லுதல், கை, கால் தளர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படும். எனவே, கவனமுடன் இருக்க வேண்டும். நீர்ச்சத்து குறைந்தால், உடனே தண்ணீர் அருந்தி உடலை இயல்புக்கு கொண்டு வர வேண்டும்.
People from Chennai say there was good rains today evening