உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேளாண்துறை அறிவிப்பு

வேளாண்துறை அறிவிப்பு

உடுமலை; உடுமலை பகுதிகளில் தற்போது மழை துவங்கியுள்ள நிலையில், மழையை பயன்படுத்தி உழவு செய்து, பயிர் சாகுபடி மேற்கொள்ள, வேளாண்துறை சார்பில் மானிய விலையில் விதைகள் வினியோகம் செய்யப்படுகிறது.உயர் விளைச்சல் ரகங்களான, சோளம் கோ-32, தேவையான அளவு இருப்பு உள்ளது. ஒரு கிலோ விதைச்சோளம், ரூ.70 ஆகும். இதில், அரசு மானியம், ரூ.30; விவசாயிகளுக்கு, ரூ.40க்கு வழங்கப்படுகிறது. உளுந்து வி.பி.என்., 8 ரக விதை ரூ.128, அரசு மானியம், 50 வழங்குகிறது. விவசாயிகள், ரூ.78 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். தென்னையில் ஊடுபயிராகவும், உளுந்து, சோளம் விதைக்கலாம், மானிய விலையில் விவசாயிகள், விதைகளை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம், என உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை