உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முற்றுகை போராட்டம் அ.தி.மு.க., முடிவு

முற்றுகை போராட்டம் அ.தி.மு.க., முடிவு

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, ஏழாவது வார்டில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில், இரண்டாவது மண்டல அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.போராட்டம் நடத்துவது குறித்து, அ.தி.மு.க வார்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வார்டு செயலாளர் விஜயகுமார், தலைமையில் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் பெண்கள் உள்பட, 500 பேரை பங்கெடுக்க வைப்பது என முடிவு செய்யப்பட்டது.கவுன்சிலர் கவிதா, கூறியதாவது: மாநகராட்சி, 7வது வார்டில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பெரும்பான்மையான ரோடு புதுக்கப்படாமல் உள்ளது. ரோடுகள் குண்டும், குழியால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். தொடர் விபத்து நடக்கிறது. குப்பை எடுக்க, 33 பேர் வர வேண்டும். ஆனால், 15 - 20 பேர் மட்டுமே வருகின்றனர். இதனால், சுகாதார பணி கடுமையாக பாதிக்கிறது. இதனால், மண்டல அலுவலக முற்றுகை போராட்டம் நடத்துகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ