உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எய்ட்ஸ் தின உறுதிமொழியேற்பு

எய்ட்ஸ் தின உறுதிமொழியேற்பு

டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, 'உரிமையின் பாதையில்' என்ற தலைப்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். அரசு அலுவலர்கள் உறுதிமொழியேற்றனர். விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில், கலெக்டர், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், திருப்பூர் ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமாரராஜா உள்பட அதிகாரிகள், அலுவலர்கள் கையெழுத்திட்டனர்.மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ