கார்பன் உமிழ்வற்ற நிலை எட்ட இலக்கு
திருப்பூர்: ''புவி வெப்பமடைவதை குறைத்து, 2070ம் ஆண்டில், கார்பன் உமிழ்வற்ற நிலையை உருவாக்குவதே தொழில்துறையினரின் இலக்கு,'' என, ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி பேசினார்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வணிக ஊக்குவிப்பு, பிராண்டிங் மற்றும் நிலைத்தன்மைக்கான துணைக்குழு சார்பில், பருவநிலை மாற்றம் மற்றும் மேற்கூரைசோலார் அமைப்பது குறித்த கருத்தரங்கு ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. துணை குழு துணை தலைவர் மேழிசெல்வன் வரவேற்றார்.கடந்த, 2012 முதல், திருப்பூர் பசுமை சார் உற்பத்திக்கான நிலைத்தன்மையை முயற்சிகளை, திருப்பூர் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு பணி நடந்து வருகிறது.சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியால், மொத்த தேவையை காட்டிலும் மூன்று மடங்கு அதிக மின் உற்பத்தி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.இணை செயலாளர் குமார் துரைசாமி பேசியதாவது:பருவநிலை மாற்றம் மற்றும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது உலக அளவில் அவசியமாகியுள்ளது. புவி வெப்பமடைவதை குறைக்க வேண்டும்.பல்வேறு முயற்சியால், புவி வெப்பமடைவதை குறைத்து, 2070ம் ஆண்டில், கார்பன் உமிழ்வற்ற நிலையை உருவாக்குவதே தொழில்துறையினரின் இலக்கு. பள்ளி பாடத்திட்டங்களில் நிலைத்தன்மை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய தலைப்புகளில், பாடங்கள் இடம்பெற வேண்டும்இவ்வாறு, அவர் பேசினார்.'ஆரோ வில் கன்சல்டிங்' நிறுவன பிரதிநிதி சந்தோஷ்வேலு, பருவநிலை மாற்றத்தால் ஏற் படும் பாதிப்புகள் குறித்தும், கார்பன் வெளியேற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் அவற்றை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியங்கள் குறித்தும் விளக்கினார். வி.ஆர்.என்.ஐ., நிறுவனர் ராமன் அழகிய மணவாளன்நன்றி கூறினார்.திருப்பூரின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு மேலும் அதிகரிக்க வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், சிறு தொழில் முனைவோர், எரிசக்தியை சொந்தமாக உற்பத்தி செய்ய தயாராக வேண்டும். அதற்கு தேவையான வழிகாட்டுதல்களை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வழங்கும்.- குமார்துரைசாமி, இணைச்செயலாளர்,திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.