உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஐப்பசி கிருத்திகை சிறப்பு வழிபாடு முருகன் கோவில்களில் கோலாகலம்

ஐப்பசி கிருத்திகை சிறப்பு வழிபாடு முருகன் கோவில்களில் கோலாகலம்

திருப்பூர்: ஐப்பசி மாத கிருத்திகையான நேற்று, முருகன் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.முருகப்பெருமான் கோவில்களில், கிருத்திகை, சஷ்டி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஐப்பசி மாத கிருத்திகையான நேற்று, பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டனர். திருப்பூர், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில்களில், நேற்று மாலை, சிறப்பு பூஜைகள் நடந்தன.வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வழக்கமாக, செவ்வரளி மலர்களால் அலங்கரிக்கப்படும் நிலையில், ஐப்பசி கார்த்திகையான நேற்று, வெட்டிவேர் மாலை மற்றும் மல்லிகை மாலை, செவ்வந்தி மாலைகளால், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள், அகல் விளக்கில், தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை