மாற்று விடுப்பு கோரிக்கை
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு, வரும் 27ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதை வரவேற்கிறோம். தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு நவ., 1ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் பணிபுரிந்தால் அதற்கு மாற்று விடுப்பு வழங்கப்படும் என அரசு அறிவிப்பு உள்ளது. எனவே, வரும் 27ம் தேதி பணியாற்றும் ரேஷன் ஊழியர்களுக்கு வரும் நவ., 2 ம் தேதி மாற்று விடுப்பு நாளாக அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.