அமர்நீதி நாயனார் குருபூஜை வழிபாடு
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, அமர்நீதி நாயனார் குருபூஜை நடந்தது.ஆனிமாதம் பூரம் நட்சத்திரமான நேற்று, எம்பிரான் அமர்நீதி நாயனார் குருபூஜை நடந்தது. விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உள்ள, 63 நாயன்மார் மண்டபத்தில், அமர்நீதி நாயனாருக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜை நடந்தது.சிவாச்சாரியார்கள், சிவனடியார்கள், திருத்தொண்டத்தொகை மற்றும் தேவாரம் மற்றும் திருவாசக பதிங்களை பாராயணம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.