உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விகாஸ் வித்யாலயா பள்ளி பிளஸ் 2வில் அசத்தல் சாதனை

விகாஸ் வித்யாலயா பள்ளி பிளஸ் 2வில் அசத்தல் சாதனை

திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கூலிபாளையத்தில் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கடந்த 36 ஆண்டுகளாக டாக்டர், இன்ஜினியர், ஆடிட்டர், வக்கீல் என, பல்வேறு துறை வல்லுனர்களை உருவாக்கியுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றும், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றும் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாகவும், ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளுடன் பள்ளி விளங்குகிறது.அவ்வகையில், இந்தாண்டு பிளஸ் 2 பொது தேர்வில் மாணவி கோதை காமாட்சி, 597 மதிப்பெண் பெற்று மாநிலத்தில், மூன்றாமிடம், பள்ளி அளவில் முதலிடமும், மாணவர் சிவபிரதீப் மற்றும் சர்வேஷ் ஆகிய, இருவரும், 591 மார்க் பெற்று, மூன்றாமிடம் பிடித்துள்ளனர். இவ்வாண்டு, இயற்பியலில், 3 பேர், வேதியியலில், 3, கணிதத்தில், 7, கணினி அறிவியலில், 30, கணக்குபதிவியலில், 1, கணினி பயன்பாட்டில், 3, வணிகவியலில், 1 என, 48 பேர் சென்டம் பெற்று அசத்தியுள்ளனர். மாணவி கோதை காமாட்சி பொறியியல் தரவரிசையில், 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளார்.பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல், மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவபிரியா, பள்ளி முதல்வர் அனிதா ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.பள்ளி மாணவர் சேர்க்கைக்கு, 89034-94036, 89034 - 93702, 94425 - 06449 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ