உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தடகளத்தில் அசத்தல் வெற்றி; மாணவியருக்கு பாராட்டு

தடகளத்தில் அசத்தல் வெற்றி; மாணவியருக்கு பாராட்டு

உடுமலை; மாநில அளவிலான முதல்வர் கோப்பை போட்டியில், வெற்றி பெற்ற மாணவியருக்கு, ஜி.வி.ஜி., கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர். மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மதுரையில் நடந்தது. இதில், உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவியர்கள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்று, மொத்தமாக ரூ. 2 லட்சம் பரிசுத்தொகை பெற்றுள்ளனர். இரண்டாம் ஆண்டு எம்.ஏ., வரலாறு மாணவி ஏஞ்சல் சில்வியா, 200 மீ., ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம், ரூ.75,000 ரொக்கப்பரிசு, 100 மீ., ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் மற்றும் ரூ. 50,000 ரொக்கப்பரிசும் பெற்றுள்ளார். இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் அப்ளிகேசன் மாணவி பவீனா, உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று ரூ.75,000 பெற்றுள்ளார். சாதனை புரிந்த மாணவியர்க்கு கல்லூரி செயலர் சுமதி கிருஷ்ண பிரசாத், கல்லூரி முதல்வர் கற்பகவள்ளி, இயக்குநர் மஞ்சுளா, விளையாட்டுத்துறை பேராசிரியர் சுஜாதா, பேராசிரியர்கள், மாணவியர் உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !