மேலும் செய்திகள்
அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்
15-Apr-2025
திருப்பூர்; அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதி, குலாலர் விநாயகர் கோவில் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு, அ.தி.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ.,குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனால், ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் ரோடு, மாநகராட்சி ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.திருப்பூர் மாநகர மாவட்ட காங்., சார்பில், அம்பேத்கர், முன்னாள் எம்.பி., வசந்தகுமார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இருவரின் உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர மாவட்ட காங்., தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஈஸ்வரன், நகர துணைத் தலைவர் கதிரேசன், மகளிரணி செயலர் கலாராணி உட்பட பலர் பங்கேற்றனர்.அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில், மாவட்ட தலைவர் பாரிகணபதி, தலைமையில் மாநகராட்சி அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.பல்வேறு அரசியல் கட்சியினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
15-Apr-2025