மேலும் செய்திகள்
பெண்ணை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்
22-Sep-2024
தங்கவேல், 58, ஆட்டோ டிரைவர், கொங்கு மெயின் ரோடு: எட்டு வயதில், தெருவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த ஒரு தெரு நாய் எனது காலில் கடித்து விட்டது.மற்ற நண்பர்கள் கல்லை துாக்கி காட்டி விரட்டியதால் நாய் தப்பியது. அப்போது, நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி 17 ஊசி போட வேண்டிய நிலை. தினமும் மருத்துவமனை அழைத்துச் சென்று என் பெற்றோர் ஊசி போட வைத்தனர்.நீண்ட நாள் பத்திய சாப்பாடு என்பதை பின்பற்ற வேண்டிய நிலை. பெற்றோரின் உரிய கவனிப்பால் எந்த பாதிப்பும் இன்றி அதிலிருந்து மீண்டேன். இன்றும் கூட தெருவில் நாய்களைக் கண்டால் ஒதுங்கிச் சென்று விடுவேன். அந்த நாய்க்கடி 50 ஆண்டாக என் நினைவில் உள்ளது. தற்போது மருத்துவம் முன்னேறி விட்டது. இருப்பினும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுத்து அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு தங்கவேல் கூறினார். மகள் மருத்துவக்கனவு நாய்களால் தாய் பட்ட பாடு
மகளின் மருத்துவப் படிப்பு தொடர்பான பணிகளுக்கு, சென்னை புறப்பட்டாள் தாய். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இரவு, 11:00 மணிக்கு தாயும், மகளும் ரயிலில் ஏற காத்திருந்தனர். ரயில் சற்று தள்ளி நிற்க, கடைசியில் இருந்த ரயிலின் பொதுப்பெட்டியில் ஏற பதட்டத்தில் ஓடியுள்ளனர். இதைப் பார்த்த பிளாட்பார்மில் படுத்திருந்த நாய்கள், தாயின் சேலையை எட்டி பிடித்து கடிக்க பாய்ந்தது. ரயில் சென்று விட்டால், 'காலையில் சென்னை செல்ல முடியாதே, மகளின் கனவு என்னாவது' என யோசித்த தாய், நாயுடன் போராடி விரட்டப்பார்த்தார்.இருப்பினும், ஓரிரு நாய்கள் ஒன்றாக இணைந்து சேலையை பற்றிக்கொள்ள, மகளிடன் உதவியுடன் கிழிந்த ஆடையுடன் ரயிலில் ஏறிக்கொண்டனர். ஒரு நாய் இடது காலில் பல் பதிய கீறி விட, நள்ளிரவில் முதலுதவி செய்து, சென்னை பயணமாகினர்.ரயில்வே ஸ்டேஷனில் கிடைக்கும் பொருட்களை சாப்பிட்டுக்கொண்டு, பத்துக்கும் அதிகமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. ரயில்வே எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், மாநகராட்சி ஊழியர்கள் கவனம் செலுத்துவதில்லை.
22-Sep-2024