சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி சுகாதார சீர்கேட்டால் வேதனை
உடுமலை: மடத்துக்குளம் அருகே, குப்பம்பாளையம் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், குழந்தைகளின் பாதுகாப்பும், சுகாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. மடத்துக்குளம் அருகே சங்கராமநல்லுார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி குப்பம்பாளையம். அப்பகுதி குழந்தைகள் பயன்பெறும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அம்மையத்துக்கு ஆண்டிபட்டி செல்லும் ரோட்டில், நிரந்தர கட்டடமும் கட்டப்பட்டது. ஆனால், ரோட்டையொட்டி சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. திறந்தவெளியாக இருப்பதால், மையத்தை ஒட்டி குப்பையை வீசிவிடுகின்றனர். இதனால், சுகாதார பாதிப்பு ஏற்படுவதுடன், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் கட்டி, குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.