| ADDED : நவ 05, 2024 09:06 PM
உடுமலை; தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் போராட்டத்தால், மையங்கள் பாதி நேரம் செயல்படவில்லை.தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், நேற்று முன் தினம் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது.இதனால் உடுமலை பகுதியில் நேற்று அங்கன்வாடி மையங்கள் பாதி நேரம் செயல்படவில்லை.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கடந்த மாதம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. அந்த இடத்திற்கே மீண்டும் பணியிடம் வழங்க வேண்டும்.கூடுதல் பொறுப்பு பார்த்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு, மூன்று நாட்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்கவேண்டும்.அதிகமாக உள்ள காலிப்பணியிடங்களினால், ஒரு ஊழியர் இரண்டு மூன்று மையங்களை பொறுப்பு பார்க்கும் நிலை உள்ளது. உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்பி திட்டத்தை செழுமைப்படுத்த வேண்டும்.அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 42 வயதில் முறையாக பயிற்சி கொடுத்து, அவர்களுக்கு கிராமப்புற செவிலியர்களாக பதவி உயர்வை வழங்கிட வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.