உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 1,330 குறளையும் கற்க வேண்டும்: மாணவர்களுக்கு அண்ணாமலை அறிவுரை

1,330 குறளையும் கற்க வேண்டும்: மாணவர்களுக்கு அண்ணாமலை அறிவுரை

அனுப்பர்பாளையம் ; ''மாணவர்கள் 1,330 குறளையும் கற்க வேண்டும்'' என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தினார்.- காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில், திருக்குறள் உலக சாதனை விழா திருப்பூர், கணக்கம்பாளையம் கிருஷ்ண மஹாலில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் திருவேங்கடம் வரவேற்றார். பேருராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தொடங்கி வைத்தார். மொத்தம் 34 பள்ளிகளை சேர்ந்த 1, 330 மாணவர்கள் கலந்து கொண்டனர்.வாசிப்பு திறனை மேம்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாணவரும் ஒரு குறளை கூறினர். மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வழங்கி பேசியதாவது:குழந்தைகள் உலகத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு மட்டுமே சூழ்ந்து இருக்கும். மாணவ செல்வங்களுக்கு 'கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக' என்ற குறளை ஞாபகப்படுத்துகிறேன். எதை எல்லாம் கற்க வேண்டுமோ அதை சரியாக கற்றுக்கொண்டு, வாழ்க்கை முறையில் அந்த கல்வியை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் 1,330 குறளையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிரதமர் மோடி, வாழ்க்கையில் எந்த பிரச்னை வந்தாலும் அதற்கு தீர்வு திருக்குறளில் உள்ளது என கூறுகிறார். வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு நுாலாக திருக்குறளை வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அண்ணாமலைக்கு 'இளம்புயல்' பட்டம்

முன்னதாக காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில், பேருராதீனம், அண்ணாமலைக்கு 'இளம் புயல்' என்ற பட்டத்தை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Senthoora
ஜன 28, 2025 05:14

அண்ணனுக்கு எதன்னை குரல் தெரியும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 19:16

அண்ணாமலை காமெடி பண்ணியிருக்கார் ...... குறட்பாக்களை அறிந்து வைத்திருப்பது முக்கியமல்ல .... அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் பாடச்சுமை வேறு .....


Balasubramanian
ஜன 27, 2025 18:14

பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்கள் அறத்துப்பால் பொருட்பால் மட்டும் கற்றால் போதுமானது மற்றவை பிறகு கற்றால் நன்மை பயக்கும்


அப்பாவி
ஜன 27, 2025 15:27

நமக்கு எத்தனை குறள் தெரியும் கோவாலு?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 19:17

ஜாபர் சாதிக்கின் நண்பனே போதை ஒழியட்டும் ன்னு சொல்றாப்ல .... அதையும் கிண்டல் பண்ணு .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை