உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை கொட்ட எதிர்ப்பு; லாரிகள் சிறைபிடிப்பு

குப்பை கொட்ட எதிர்ப்பு; லாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூர் : திருப்பூரில் சேகரமாகும் குப்பைகள், முதலிபாளையத்தில் பயன்படுத்தப்படாத கல்குவாரியில் கொட்டப்பட்டது. இதற்கு, அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குப்பை கொட்ட வந்த லாரியை மக்கள் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற மாநகராட்சி அதிகாரிகள் குப்பை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் மாற்றிடம் கிடைத்ததும், குப்பை கொட்டப்படாது என உறுதி அளித்தனர். இதனால், சிறைபிடிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.பொதுமக்கள் கூறுகையில், ''எங்கள் பகுதியில் கொட்டப்படும் குப்பையால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளில் இருக்க முடிவதில்லை. இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு, உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது. முதலிபாளையம், சென்னிமலைபாளையத்தில் குப்பை கொட்ட கூடாது. நிலத்தடி நீரும் கெட்டுப்போகும். மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இடத்தை தேர்வு செய்து குப்பை கொட்ட வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி