உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

உடுமலை; அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், ஆன்லைன் வாயிலாக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட அளவிலான கலந்தாய்வின் வாயிலாக, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், சேர்க்கைக்கான விபரங்கள் மற்றும் விண்ணப்பங்கள், www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில், ஆகஸ்ட் மாதம் முதல், வரும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்குகின்றன. எட்டாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மாநில அளவில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழிற்பிரிவுகள், அவற்றுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்தும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மாணவர்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். எந்த மாவட்டத்தில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பம் உள்ளது என்பதை குறிப்பிட வேண்டும்.ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில், கலந்தாய்வுக்கு தரவரிசை வழங்கப்படும். மாணவர்களுக்கு அவர்கள் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு கடிதம் அனுப்பப்படும்.இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க தெரியாதவர்கள், அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச்சான்று, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் உள்ளிட்டவற்றை, நேரில் கொண்டு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.உடுமலை தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்சாரப்பணியாளர், பிட்டர், மெக்கானிக் மோட்டார் வாகன பழுது பார்ப்போர், ஒயர்மேன், வெல்டர், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன், மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், அட்வான்ஸ்டு சிஎன்சி மெஷின் டெக்னீசியன் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.இத்தகவலை, உடுமலை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நதிசந்திரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை