உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடிகளில் காலிப்பணியிடம் வரும் 23க்குள் விண்ணப்பிக்கலாம்

அங்கன்வாடிகளில் காலிப்பணியிடம் வரும் 23க்குள் விண்ணப்பிக்கலாம்

உடுமலை, ;திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சமூக நலத்துறையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.திருப்பூர் மாவட்டத்தில் காலியாக இருக்கும் அங்கன்வாடி மைய பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களில், பணியாளர்கள் காலிப்பணியிடம் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.விண்ணப்பங்களை, www.icds.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஏப்., 23ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, ஜாதிச்சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களில் சுய சான்றொப்பம் பெற்ற நகல்களை சமர்பிக்க வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண், மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் பெற்று இணைக்க வேண்டும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை