உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொண்டத்து காளியம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்

கொண்டத்து காளியம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்

பெருமாநல்லூர் : -பெருமாநல்லுார் கொண்டத்துக் காளியம்மன் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில் அறங்காவலர்களாக வாவிபாளையத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி, பொடாரம்பாளையத்தை சேர்ந்த மனோகரன், மொய்யாண்டம்பாளையத்தை சேர்ந்த திருமூர்த்தி, பள்ளிபாளையத்தை சேர்ந்த பானுமதி, காளிபாளையம் ஜெகநாதன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அறங்காவலர்கள் பதவியேற்பை தொடர்ந்து, தேர்வு மூலம் குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர், என செயல் அலுவலர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை