உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாணவர்களுக்குப் பாராட்டு விழா

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாணவர்களுக்குப் பாராட்டு விழா

பெருமாநல்லுார்:திருப்பூர், கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா கணக்கம்பாளையம் கிருஷ்ணா மஹாலில் நடந்தது.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன், கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.பேராசிரியர் சாந்தாமணி, ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தங்கவேல், ஸ்ரீசக்தி கல்வி நிறுவன சேர்மன் தங்கவேல், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கொங்கு பண்பாட்டு மைய தலைவர் ஆதன் பொன் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நல்ல மதிப்பெண் பெற்ற 10ம் வகுப்பு மாணவர்கள் 139 பேருக்கும், 12ம் வகுப்பு மாணவர்கள் 156 பேருக்கும் அமைப்பு சார்பில் ஷீல்டு, சால்வை மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது. முன்னதாக சலங்கை ஆட்டம் உள்ளிட்ட கொங்கு மண்டல பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை