உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மெரிட் மெட்ரிக் பள்ளி மாணவருக்கு பாராட்டு

மெரிட் மெட்ரிக் பள்ளி மாணவருக்கு பாராட்டு

திருப்பூர் : பல்லடம் குறுமைய போட்டிகள், பூமலுார், அரசு உயர்நிலைப்பள்ளியில், நடத்தப்பட்டது.இதில், மெரிட் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, முதலிரண்டு இடங்களை பெற்றனர். இப்பள்ளி மாணவியர், 14 வயது மற்றும், 17 வயது எறிபந்து போட்டியில் முதலிடம், 19 வயது பிரிவில் கூடைப்பந்தில் 2 வது இடம். மாணவர்கள், 14 வயது எறிபந்தில் முதலிடம், பேட்மின்டன் இரட்டையர் பிரிவில் முதலிடம், 17 வயது கூடைப்பந்தில் 2வது இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைவர் பெரியசாமி, தாளாளர் கவுதம், பள்ளி முதல்வர் ஆனந்தி உள்ளிட்டோர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி