உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில் பழகுனர் சேர்க்கை; வரும், 20ம் தேதி முகாம்

தொழில் பழகுனர் சேர்க்கை; வரும், 20ம் தேதி முகாம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அளவில் பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் (அப்ரண்டிஸ்), தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும் முகாமில், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுனர்களை தேர்வு செய்கின்றன.முகாமில் தேர்வு செய்யப்படுவோருக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசு சார்பில் தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும்.இச்சான்று பெறுவோருக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப, தொழில் பழகுனர்களுக்கு உதவித்தொகையும் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ள 8 முதல் பிளஸ் 2 படித்த தகுதியானோர், உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கவேண்டும்.மேலும் விவரங்களுக்கு, திருப்பூர் மத்திய பஸ்ஸ்டாண்ட் பின்புறம், காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை அணுகலாம். 94990 55695, 86100 96431 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை