உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எரிவாயு தகன மேடை மேம்படுத்த ஒப்புதல்

எரிவாயு தகன மேடை மேம்படுத்த ஒப்புதல்

பல்லடம்; பல்லடம், பச்சாபாளையத்தில், எரிவாயு தகன மேடை அபிவிருத்தி பணியை, ஆத்மா அறக்கட்டளை மேற்கொள்ள இசைவு தெரிவித்துள்ளது; இதற்கு, நகராட்சி ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்லடம் நகராட்சி, 8வது வார்டு, பச்சாபாளையத்தில் எரிவாயு தகன மேடை, 1.45 கோடி ரூபாயில் நகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டது. இதில், மக்கள் காத்திருப்பு அறை, பாதுகாப்புச்சுவர், புகைக்குழாய் அமைப்பு, எரிவாயு அறை, ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், கழிப்பிடம், அலுவலக அறை உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளை, பல்லடம் ஆத்மா அறக்கட்டளை நிறுவனத்தினர் மேற்கொள்ள உள்ளனர். நகராட்சி கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டது. பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி, நகராட்சி கமிஷனர் அருள், ஆத்மா அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், வரும் நாட்களில் எரிவாயு தகன மேடை பணிகளை நிர்வாகிப்பது, பராமரித்து ஒப்படைப்பது குறித்து, விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை