உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எம்.ஜி.வி., பள்ளியில் வில்வித்தை போட்டி

எம்.ஜி.வி., பள்ளியில் வில்வித்தை போட்டி

திருப்பூர்; திருப்பூர், வெங்கமேடு, எம்.ஜி.வி., குளோபல் அகாடமி பள்ளியில், சி.ஐ.எஸ்.சி.இ., நடத்திய மண்டலங்கள் வாரியான வில்வித்தைப் போட்டி நடந்தது.பள்ளி நிறுவனர் பாலாஜி வேணுகோபால், பள்ளி தாளாளர் மஞ்சுளா பாலாஜி, நாச்சியார் பாடசாலை முதல்வர் கைலேஷ்வரி ஆகியோர் துவக்கிவைத்தனர். 14, 17, 19 வயதினருக்கு, இண்டியன், காம்பவுண்ட், ரீகர்வ் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 11 பள்ளிகள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் நான்கு இடங்களைப் பெற்றவர்கள், சி.ஐ.எஸ்.சி.இ., பிராந்தியங்கள் வாரியாக நடத்தப்பட உள்ள போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர். எம்.ஜி.வி., குளோபல் அகாடமி பள்ளி பிளஸ் 2 மாணவி ஸன்மதி, பத்தாம் வகுப்பு மாணவர் ஹரிஷ், எட்டாம் வகுப்பு மாணவர் ஸ்ரீநிஷ் ஆகியோர் முதலிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ