மேலும் செய்திகள்
மாநில கபடி போட்டிக்கு மாவட்ட அணி தேர்வு
03-Nov-2024
மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பில், மாநில ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி, நவ., 22 முதல், 24 வரை மூன்று நாட்கள், வேலுார் மாவட்டம், காட்பாடியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட அணித்தேர்வு வரும், 16ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, மாவட்ட கபடி கழக அலுவலக மைதானத்தில் நடக்கிறது.மாவட்ட அணித்தேர்வில், கடந்த, 2004, டிச., 10ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் (20 வயதுக்கு உட்பட்டவர்கள்) பங்கேற்கலாம்; போட்டியாளர், 70 கிலோவுக்குள் இருக்க வேண்டும். விதிமுறைப்படி 'மேட்'டில் மட்டும் அணித்தேர்வு என்பதால், கட்டாயம் ஷூ அணிந்து வர வேண்டும்.வயது சான்றிதழ், ஆதார், பள்ளி சான்றிதழ் கொண்டு வர வேண்டும். தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு, மாவட்ட கபடி கழகம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு, மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.இத்தகவலை, மாவட்ட கபடி கழக செயலாளர், ஜெயசித்ரா சண்முகம் தெரிவித்தார்.
03-Nov-2024