உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குரூப் - 4 மாதிரித்தேர்வு எழுத தயார்தானே!

குரூப் - 4 மாதிரித்தேர்வு எழுத தயார்தானே!

திருப்பூர்; வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கான 'குரூப் - 4' தேர்வு, வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், கடந்த ஜன., 1ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, வரும் 18, 21, 26 மற்றும் ஜூலை 2, 4, 9ம் தேதிகள் என, மொத்தம் ஆறு மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பிட்ட நாட்களில், காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாதிரித்தேர்வுகள் நடைபெறும்.மாதிரி தேர்வு எழுத விரும்புவோர், 0421 2999152, 94990 55944 என்கிற எண்களில் தொடர்புகொண்டு பதிவு செய்யவேண்டும் என, கலெக்டர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !