உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா

அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா

உடுமலை: உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், நடனம் மற்றும் தற்காப்புக்கலை போட்டிகள் நடந்தன. உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் கலைத்திருவிழா போட்டிகள், கடந்த 16ம் தேதி முதல் நடக்கிறது. பேச்சு, சிறுகதை, பாடல்வரிகள் எழுதுவது, கவிதை, டிஜிட்டல் போஸ்டர் வடிவமைப்பு உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட போட்டிகள் நடக்கிறது. இதில் தனி நடனம், குழு நடனம், தற்காப்புக்கலை போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன. இப்போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போட்டிகள் அக்., 10ம்தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !