உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேளாண் விற்பனை இணை இயக்குனர் பணியிடம்! திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு பலன் தருமா?

வேளாண் விற்பனை இணை இயக்குனர் பணியிடம்! திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு பலன் தருமா?

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தேங்காய், நெல், நிலக் கடலை, பருத்தி, சோளம், மக்காசோளம், சிறு தானியம், கரும்பு என எண்ணற்ற பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.விளைப்பொருட்களின் விலை ஏற்றத்தாழ்வுடன் இருந்தாலும், விவசாயம் தொடர்ந்து நடந்து வருகிறது. தவிர, ஊத்துக்குளியில் வெண்ணெய் தயாரிப்பு உள்ளிட்ட மதிப்புக்கூட்டு வர்த்தகமும் சில இடங்களில் நடந்து வருகிறது.இந்நிலையில், விளை பொருட்கள், அவற்றின் வாயிலாக தயாரிக்-கப்படும் மதிப்புக்கூட்டு பொருட்களை சந்தைப்படுத்த, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையினரின் பங்களிப்பு அவசியம். இதுநாள் வரை, திருப்பூர் மாவட்டத்துக்கென தனி-யாக வேளாண் விற்பனை துறைக்கு இணை இயக்குனர் பணி-யிடம் இல்லை. வேளாண் அலுவலர் அந்துஸ்து பெற்ற வர்களே, பணியை கவ-னித்து வந்தனர். ஒருங்கிணைந்த கோவை மாவட்டமாக திருப்பூர் இருந்த போது தாராபுரம், காங்கயம், வெள்ள கோவில், ஊத்துக்-குளி உள்ளிட்ட வட்டாரங்கள் ஈரோடு மாவட்ட கட்டுப்பாட்-டிலும், திருப்பூர், உடுமலை, அவிநாசி, மடத்துக்குளம், உடு-மலை, பல்லடம் உள்ளிட்ட பிற வட்டாரங்கள் கோவை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும் இருந்தன; அந்த அடிப்ப-டையில் தான், வேளாண் வணிகத்துறையின் நிர்வாகப்பணிகளும் நடந்து வந்தன.தற்போது, திருப்பூர் மாவட்டத்துக்கென இணை இயக்குனர் பணி-யிடம் நிரப்பப்பட்டுள்ள நிலையில், தற்போது திருப்பூர் மாவட்-டத்துக்கு உட்பட்ட, 13 வட்டாரங்களின் செயல்பாடுகளும் ஒரே அதிகாரியின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.இதன் வாயிலாக, விவசாயிகளின் விளைப் பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் சந்தை வசதி மற்றும் வாய்ப்பு மேம்படுத்தப்பட்டு, வாழ்வாதாரம் உய-ருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை