உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அத்திக்கடவு திட்டம்; குளங்கள் நிரம்பாதது ஏன்?

 அத்திக்கடவு திட்டம்; குளங்கள் நிரம்பாதது ஏன்?

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் உபகரணங்கள் சேதமடைவது; இரண்டாவது மின் இணைப்பு தாமதம் ஆகிய காரணங்களால் குளங்களுக்கு நீர் செல்வது பாதிக்கப்படுகிறது. அவிநாசி அடுத்த நடுவச்சேரியைச் சேர்ந்த விவசாயி பால்ராஜ், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில், உள்ள சில குறைகளைச் சுட்டிகாட்டி அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வரின் முகவரி துறைக்கு மனு அனுப்பினார். அதற்கு நீர் வளத் துறை ெசயற்பொறியாளர் அப்புசாமி அனுப்பிய பதில்: அத்திக்கடவு அவிநாசி திட்ட பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள், குழாய் மற்றும் ஏர் வால்வுகள் உள்ளிட்ட உபகரணங்களைச் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் நீர் செல்வதில் தாமதமாகிறது. இதுபோன்ற சேதங்கள் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. எம்மாம்பூண்டி நீரேற்று நிலையத்தில் இரண்டாவது மின் இணைப்பு மலையபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து பெற பணிகள் நடக்கிறது. இதில், 5 கி.மீ. பாதையில் 21 கோபுரங்களில் எட்டு அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கோபுரம் அமையவுள்ள இடங்களில் நில உரிமையாளர் எதிர்ப்பால் தாமதமாகிறது. அன்னுார் அருகேயுள்ள நீரேற்று நிலையத்தில் பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் முதன்மை இணைப்பு பெறப்பட்டுள்ளது. இரண்டாவது இணைப்பு பசூர் மின் நிலையத்திலிருந்து பெறப்படவுள்ளது. இந்த மின் நிலையப் பணிகள் முழுமையடையாமல் உள்ளது. அதனால் இணைப்பு பெறுவது தாமதமாகிறது. இதில் உள்ள ஆறு பம்ப்புகளும் கடந்த 2ம் தேதி முழுமையாக இயக்கப்பட்டது. இனி அனைத்தும் முழுமையாக இயக்கி, நீரேற்றும் பணி மேற்கொள்ளப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ