பிரதிபலிப்பான் பொருத்துங்க
உடுமலை: கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இதன் வழியாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆனால், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். இப்பாலத்தில், இவற்றை பொருத்த, நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.