மேலும் செய்திகள்
கடைகளில் கைவரிசை
15-Aug-2025
திருப்பூர்:ஒடிசாவை சேர்ந்த ராகுல், 21 என்பவர், திருப்பூர் மங்கலம் ரோடு லிட்டில் பிளவர் நகரில் தங்கி பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வெளியே அமர்ந்து, மொபைல் போனை பார்த்து கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த சபரி, 20 என்பவர், ராகுலை மிரட்டி, மொபைல் போனை பறிக்க முயன்றார். தொடர்ந்து, அவரை தாக்கினார். பின், வீட்டுக்கு சென்ற சபரி, தனது சகோதரர் திலீப் மற்றும் 16 வயது தம்பி ஆகியோருடன் பேட், ரம்பம் உள்ளிட்டவை எடுத்து வந்து தாக்கினார். தாக்கியவர்களின் தாயார் சம்பவ இடத்துக்கு சென்று, சமாதானப்படுத்தி, மூன்று பேரையும் அழைத்து சென்றார். புகாரின் பேரில், மூன்று பேர் மீது வழக்குபதிவு செய்து சென்டரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Aug-2025