ஆதி ஆண்டு கருத்தரங்கு ஆடிட்டர்கள் பங்கேற்பு
திருப்பூர்,; இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் திருப்பூர் கிளை நிறுவிய தினம் கொண்டாடப்பட்டது. கிளை துவக்கிய தின விழாவையொட்டி, 'ஆதி' என்ற முதல் வருடாந்திர கருத்தரங்கு, கிளை அலுவலக கூட்டரங்கில் நடந்தது.கிளை தலைவர் தருண் தலைமை வகித்தார். செயலாளர் சபரீஸ் முன்னிலை வகித்தார்.ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் பேசுகையில், ''நிறுவனத்தின் வெற்றிக்கு ஆடிட்டர்கள் பங்களிப்பு இன்றியமையாதது. ஆடிட்டர்கள் ஆலோசனையை பெற்ற பிறகே, தொழில் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி பணிகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். தொழில்துறையினர் செலுத்தும் வரியானது, நாட்டை வலிமையாக கட்டமைக்க வழிவகுக்கும்,'' என்றார்.தென்னிந்திய தலைவர் ரேவதிரகுநாதன் பேசுகையில், ''ஆடிட்டர்கள், தங்கள் துறைகளில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். புதிய துறைகளில் தங்கள் பங்களிப்பை வழங்குவதன் மூலமாக, நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.மும்பையை சேர்ந்த ஆடிட்டர் விஷால், 'விஷன் அகாடமி' இயக்குனர் டாக்டர் பெருமாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கருத்தரங்கு ஏற்பாடுகளை, ஆடிட்டர் செந்தில்குமார், ராஜேஷ் கண்ணன் செய்திருந்தனர்.