மேலும் செய்திகள்
கம்பன் விழாவில் பரிசளிப்பு
06-Aug-2025
அவிநாசி; அவிநாசியில் புதிதாக துவங்கப்பட்ட கம்பன் கழகத்தில் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. முதல் கூட்டம் அவிநாசியில் உள்ள கருணாம்பிகா அரிசி ஆலை வளாகத்தில் நடைபெற்றது. அதில், பொறுப்பாளர்கள் தேர்வு நடந்தது. அவிநாசி கம்பன் கழக தலைவராக ராஜ்குமார், செயல் தலைவராக பழனிசாமி, செயலாளராக மெய்ஞானமூர்த்தி, பொருளாளராக ராமகிருஷ்ணன், துணைத்தலைவராக சுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றனர். கம்பன் கழக ஆலோசகர்களாக சுப்பிரமணியம், நடராசன், வெங்கடாசலம், அப்பர்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கம்பருடைய கவி சிறப்பையும் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள வாழ்வியல் நெறிமுறைகளையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பது, பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே கம்பனின் கவிநயத்தை சுவைக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
06-Aug-2025